சோதனை ஓட்டத்தின் போது குழாயில் உடைப்பு - சீரமைக்கும் பணி தீவிரம்

0 529

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர் கொண்டு வரும் திட்டத்திற்கான குழாய் ஒன்றில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் அதனை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க, ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டு போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்காக ஜோலார்பேட்டையில் உள்ள ஒகேனக்கல் கூட்டு குடிநீர் தரைதொட்டியில் இருந்து பார்சம்பேட்டை ரயில் நிறுத்தம் வரை சுமார் மூன்றரை கிலோ மீட்டர் தூரக்கு குழாய்கள் அமைக்கும் பணி நிறைவுற்று, வெள்ளோட்டம் நடைபெற்றது.

அப்போது, பார்சம்பேட்டை கூட்டு சாலை அருகே அமைக்கப்பட்டிருந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் சோதனை ஓட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இதனிடையே, வில்லிவாக்கத்திற்கு ரயில் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீரை பெரிய இரும்பு குழாய்கள் மூலம் கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எடுத்து செல்வதற்கு பெரிய குழாய்களுடன் இணைக்கும் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளன.

புதன்கிழமை இரவுக்குள் 100 சதவீத பணிகள் நிறைவு பெற்று ஓரிரு தினங்களில் சென்னைக்கு தண்ணீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments