உலகின் மிகப்பெரிய விமானத் தயாரிப்பு நிறுவனமாக உருவெடுக்கிறது 'ஏர்பஸ்'

0 894

உலகின் மிகப்பெரிய விமானத் தயாரிப்பு நிறுவனம் என்ற அந்தஸ்தை, போயிங்கிடம் இருந்து ஏர்பஸ் நிறுவனம் பறிக்க உள்ளது.

அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரித்த 737 மேக்ஸ் ரக விமானங்கள், இரு முறை மிகப்பெரிய விபத்துகளில் சிக்கவே, அவற்றின் மீதான நம்பகத்தன்மையை விமான சேவை நிறுவனங்கள் இழந்தன.

737 மேக்ஸ் ரக விமானங்களை வாங்குவதை பெரும்பாலான நிறுவனங்கள் நிறுத்திக் கொள்ளவே, போயிங்கிற்கு சிக்கல் அதிகரித்துள்ளது. ஒரு காலத்தில் அதிகம் விற்பனையான 737 மேக்ஸ் விமானத்திற்கு ஏற்பட்ட பரிதாப நிலையால், மார்ச் வரையிலான காலகட்டத்தில், போயிங் நிறுவனமானது 239 வர்த்தக விமானங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 37 விழுக்காடு குறைவாகும். அதேவேளையில் இந்த ஆண்டில் 890 விமானங்கள் வரை தயாரித்து வழங்க பிரான்சின் ஏர் பஸ் நிறுவனம் உறுதி பூண்டுள்ளது. இதன் காரணமாக 7 ஆண்டுகளுக்குப் பின்னர், போயிங்கை, பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைப் பிடிக்கும் பாதையில் ஏர் பஸ் பயணித்துக் கொண்டிருப்பது உறுதியாகி உள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments