மாநாடு நடக்குமா ? சிக்கலில் சிம்பு…!

0 3453

வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க இருந்த சிம்பு முன்பணமாக 2 கோடி ரூபாய் பெற்றுக் கொண்டு வாரத்தில் இரண்டு நாட்கள் விடுப்பு கேட்டு அடம் பிடிப்பதால் படப்பிடிப்புக்கு செல்ல முடியாமல் படக்குழு தவித்து வருகின்றது.

இயக்குனர் சீமானால், சூப்பர் ஸ்டாராக நம்பப்படும் சிம்புவின் வினோத நடவடிக்கையால் அவரை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் தவித்துவருவதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டு உள்ளது..!

மைக்கேல்ராயப்பன், ஞானவேல்ராஜா வரிசையில் தற்போது தவிப்புக்குள்ளாகி இருப்பவர் மாநாடு படத்திற்காக சிம்புக்கு 2 கோடி ரூபாயை முன்பணமாக கொடுத்து விட்டு 3 மாதமாக காத்திருக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி..!

அனைவரும் சிம்புக்கு எதிராக புது புது பிரச்சனைகளை கொம்பு சீவி விட்ட போது, சிம்புவை வைத்து படமெடுக்க நம்பி கரம்கோர்த்தது சுரேஷ் காமாட்சி, வெங்கட்பிரபு கூட்டணி..! தன்னுடைய வினோத நிபந்தனையால் தற்போது அவர்களை சிம்பு தவிக்கவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினமும் 400 க்கும் மேற்பட்ட குழுவினருடன் ஊட்டியில் 40 நாட்கள் மாநாடு படப்பிடிப்படை தொடங்கி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் தனக்கு சனி, ஞாயிறு விடுமுறை வேண்டும் என்று பள்ளிச்சிறுவன் போல சிம்பு அடம் பிடித்து வருவதால் திட்டமிட்டப்படி படப்பிடிப்புக்கு செல்ல இயலாமல் படக்குழு சென்னையிலேயே முடங்கி உள்ளதாக கூறப்படுகின்றது.

சிம்பு நடிக்க வந்து 35 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் ஞாயிற்று கிழமைகளில் ஒரு நாளும் நடித்து கொடுத்ததில்லை என்றும் மணிரத்னம் ஒருவருக்காக மட்டுமே ஞாயிற்று கிழமை மேக்கப் போட்டதாக சிம்பு தரப்பில் கூறிவருவதால் என்ன செய்வதென்று தெரியாமல் தயாரிப்பாளர் தரப்பு கடும் குழப்பத்தில் உள்ளது.

இந்த நிலவரம் தெரியாமல் மதுரை சிம்பு ரசிகர்களோ 500 அடிக்கு நீண்ட போஸ்டர் அடித்து ஒட்டி சிம்புவின் 35 ஆண்டு கால திரை பயண சாதனையை கொண்டாடியுள்ளனர்.

கடந்த 6 மாதங்களில் தமிழ் திரை உலகில் விஸ்வாசம்,பேட்ட படங்களை தவிர பிரபல நடிகர்கள் நடித்த அனைத்து படங்களும் தயாரிப்பாளர்களுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிம்பு ஒரு படி மேலே போய் படம் தொடங்குவதர்கு முன்பே தயாரிப்பாளருக்கு சிக்கலை உருவாக்கி உள்ளதாக கூறப்படுகின்றது.

இதனால் மாநாடு படம், ஏற்கனவே நின்று போன கெட்டவன், கான், வேட்டை மன்னன் போன்ற பட்டியலில் சேருமா ? அல்லது மன்மதன் போன்ற வெற்றி படவரிசையில் சேருமா ? என்பது சிம்புவுக்கே வெளிச்சம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments