சேலம், கன்னியாகுமரி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களின் சில இடங்களில் பரவலாக மழை

0 488

சேலம், கன்னியாகுமரி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களின் சில இடங்களில் பரவலாக மழை பெய்தது.

சேலத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து இருந்த நிலையில், சேலம் நகர் பகுதா கல்லூரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேதி, அஸ்தம்பட்டி, பழைய பேருந்து நிலையம், சாரரத்திற்கும் மேலாக மழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, குளச்சல், அழகியமண்டபம், உள்ளிட்ட பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.

வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மனம் குளிர்ந்தனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சில சாலைகளில் மழைநீர் தேங்கியது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி, பெண்ணாடம், ராமநத்தம், ஆவினங்குடி, இறையூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான காற்றுடன் மழை கொட்டித் தீர்த்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments