சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பணியில் தாமதம்?

0 633

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பணிகள் முடிவடையாததால், சோதனை ஓட்டம் புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு வரும் 10ம் தேதி ரயில் மூலம் தண்ணீர் எடுத்து வரப்படும் எனவும், அதற்கு முன்னதாக 9ம் தேதி சோதனை ஓட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், மேட்டுசக்கரகுப்பம் காவிரி கூட்டு குடிநீர் நீரேற்றம் பகுதியில் மின்சாரம் இணைப்பு மற்றும் தரைதொட்டியிலிருந்து பார்சம்பேட்டை ரயில் நிறுத்தம் செல்லும் குழாய் பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை.

இதேபோல் பார்சம்பேட்டை ரயில் நிலையத்தில் இரும்பு குழாய் மற்றும் ரயிலில் நீர் நிரப்ப  பைப்புகள் அமைக்கும் பணி நடந்து வருவதால் தற்போது சோதனை ஓட்டம் புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஏற்கனவே கூறியபடி 10ம் தேதி சென்னைக்கு தண்ணீர் சென்றாக வேண்டும் என உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதால், நூற்றுக்கணக்கான பணியாளர்களை ஈடுபடுத்தி பணியை விரைந்து முடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments