மத்திய அரசு எது செய்தாலும் அதனை எதிர்க்கும் மனப்பான்மையில் அரசியல் கட்சிகள்

0 936

மத்திய அரசு எது செய்தாலும் அதனை எதிர்ப்பது என்ற அடிப்படையில் அரசியல் கட்சிகள் இருப்பதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் க.கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

நுங்கம்பாக்கத்தில் தனது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,10 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழகத்தில் எதிர்ப்பது தமிழ் சமுதாயத்திற்கு செய்யும் தீங்கு எனவும், மாநில அரசு அதனை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் 10 சதவீத இடஒதுக்கீட்டின் வருமான உச்ச வரம்பை 8 லட்சம் ரூபாயாக நிர்ணயம் செய்வதில் தனக்கு உடன்பாடில்லை எனவும் அவர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments