தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவை தொகை ரூ.4,458 கோடி

0 502

தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவை தொகை 4458 கோடி ரூபாயை திரும்ப பெற நடவடிக்கை எடுத்து வருவதாக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்.டி மூலம் மாநில அரசுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை குறைக்க, மத்திய அரசு இழப்பீடு தொகை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார். அந்த வகையில், 2017-18 ஆம் ஆண்டிற்கு 632கோடியும், 2018-19 ஆம் ஆண்டிற்கு 4724 கோடி ரூபாயும் மத்திய அரசு, தமிழக அரசுக்கு வழங்கியுள்ளதாக கூறினார். இதில் நிலுவை தொகையாக மொத்தம் 939 கோடி ரூபாய் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஜி.எஸ்.டிக்கு முன்பு மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய நிலுவை தொகையையும் சேர்த்து மொத்தம் 4,458 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையாக உள்ளது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments