"ஆர்ட்டிக்கிள் 15" திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரிய மனு தள்ளுபடி

0 679

ஆர்ட்டிக்கிள் 15 (Article 15) பாலிவுட் திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில், உருவான ஆர்ட்டிக்கிள் 15 திரைப்படம் அண்மையில் வெளியானது. இந்த திரைப்படம் சாதிய ரீதியிலான மோதல்களை தூண்டி விடும் வகையில் அமைந்திருப்பதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. மேலும் உண்மையாக நடந்த சம்பவத்தில் கற்பனைக் கதைகளை சேர்த்து இட்டுக்கட்டி படமாக்கப்பட்டிருப்பதாகவும் அந்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இந்திய பிராமன் சமாஜ் இயக்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது மனுதாரர் உரிய அதிகாரியை அணுகுமாறு அறிவுறுத்திய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments