இறுதிப் போட்டியில் நுழையப் போவது யார்? இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையே இன்று பலப்பரீட்சை

0 1789

லகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவும், நியுசிலாந்தும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் முதல் அரை இறுதிப் போட்டியில், புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இந்தியாவும், நான்காவது இடத்தில் உள்ள நியுசிலாந்தும் மோதுகின்றன. இந்தப் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் ட்ரஃபோர்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

உலக்கோப்பைத் தொடரில் நியுசிலாந்து அரை இறுதிக்குள் நுழைவது இது எட்டாவது முறையாகும். இதில் கடந்த முறை மட்டுமே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஆனால் இறுதிப் போட்டியில் அந்த அணி ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வியுற்று கோப்பையை தவற விட்டது. இந்தத் தொடரிலாவது கோப்பையை வென்று விடவேண்டும் என்பதில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியுசிலாந்து அணி உறுதியாக உள்ளது.

அதேவேளையில் கபில் தேவ், தோனிக்கு அடுத்தபடியாக தனது தலைமையில் இந்திய அணி கோப்பையைக் கைப்பற்ற வேண்டும் என்பதில் விராட் கோலி உறுதியாக உள்ளார். பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் சம பலம் பொருந்திய இந்த அணிகள் மோதும் போட்டியில் நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

நடுத்தர வரிசை ஆட்டம் கை கொடுக்கும் பட்சத்தில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது கிரிக்கெட் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. இதனிடையே மான்செஸ்டரில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்து இருப்பது சற்று கவலையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் மழையால் இந்தப் போட்டி நிறுத்தப்பட்டால் ரிசர்வ் டே முறை கடைபிடிக்கப்பட்டு நாளை மீண்டும் போட்டி நடத்தப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments