கர்நாடகாவில் நடைபெறும் சம்பவங்களில் எங்களுக்கு தொடர்பில்லை - ராஜ்நாத்சிங்

0 922

கர்நாடகாவில் நடைபெறும் சம்பவங்களில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லையென மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா காரணமாக குழப்பம் நீடித்து வருவதால், கூட்டணி அரசைக் காப்பாற்றும் முயற்சியில் காங்கிரசின் மூத்த தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

இதுதொடர்பாக மக்களவையில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் அதிர் ரஞ்சன் சவுத்ரி , கர்நாடகம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கலைக்க மத்தியில் உள்ள பா.ஜனதா அரசு சதித்திட்டம் தீட்டுகிறது என குற்றம் சாட்டினார்.

303 தொகுதிகளில் வென்ற பின்னரும் பா.ஜ.க.வின் வயிறு நிறையவில்லை என அவர் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்து பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், கர்நாடகாவில் இப்போது நடைபெறும் சம்பவங்களில் தங்களுக்கு எந்த ஒரு தொடர்பும் கிடையாது எனக் கூறினார்.

காங்கிரசில் ராஜினாமா செய்வது தற்போது பிரபலமாகி வருவதாகவும், அந்த கட்சியின் தலைவர் ராகுல் தொடங்கி, கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் வரை அதனைத் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments