அரசு மருத்துவர்கள் புறநோயாளிகள் புறக்கணிப்புப் போராட்டம் அறிவிப்பு

0 580

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 18ஆம் தேதி தமிழகம் முழுவதுமுள்ள அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தப்படும் என அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது, மூன்று மருத்துவர் சங்கங்கள் இணைந்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு என்ற அமைப்பை ஏற்படுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர்கள், காலம் சார்ந்த பணி உயர்வும் ஊதிய உயர்வும் கேட்டு கடந்த 10 ஆண்டுகளாக வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்தனர். தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களையும் அறிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments