20 வயதில் உயிரிழந்த இளம் நடிகர்

0 1028

டிஸ்னி சேனலின் சில படைப்புக்களில் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்த கேமரூன் பாய்ஸெ ((Cameron Boyce)) என்ற இளம் நடிகர் தனது 20 வயதில் காலமானார்.

டெஸ்சென்டன்ட்ஸ், க்ரோன் அப்ஸ், க்ரோன் அப்ஸ் 2 ஆகிய டிஸ்னி சேனல் படைப்புக்களில் நடித்தவர் கேமரூன் பாய்ஸ். தனது 10 வயதில் இருந்து நடிக்கத் தொடங்கிய கேமரூன், ஜெஸ்ஸீ என்ற கதாப்பாத்திரத்தில் புகழ்பெற்றவர். தாகத் திட்டம் என்ற பெயரில் நீர் இல்லாத ஊர்களுக்கு உதவ நிதி திரட்டும் பொருட்டு இன்ஸடாகிராம் பக்கம் தொடங்கிய கேமரூனுக்கு ஒரு கோடிக்கும் அதிக பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில், கேமரூன் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், இரவில் உறங்கும்போது திடீரென வலிப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாகவும் அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments