முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக் கொலை

0 1235

சென்னை மதுரவாயலில் முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த நாயுடு வெங்கடேஷ் மற்றும் தனது நண்பர் பாலசந்தருடன் நேற்றிரவு ஆற்காடு சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் அவரை சரமாரியாகத் தாக்கினர்.

கை மற்றும் வயிற்றுப்பகுதிகளில் வெட்டு காயம் ஏற்பட்ட நிலையில், பாலச்சந்தர் அந்த கும்பலிடம் இருந்து தப்பிச் சென்று அருகில் இருந்த முட்புதரில் ஒளிந்து கொண்டார். ஆனால் நாயுடு வெங்கடேசை சரமாரியாக வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

இதையடுத்து மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. தகவல் அறிந்து சென்ற மதுரவாயல் போலீசார், நாயுடு வெங்கடேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வெட்டுக்காயம் அடைந்த பாலச்சந்தர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

விசாரணையில் நாயுடு வெங்கடேசுக்கு ஏற்கனவே முன் விரோதம் இருந்திருப்பது தெரிய வந்துள்ளது. கொலைக்கான பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments