பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானில் பயிற்சி

0 997

இந்திய விமானப்படை தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது. காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆபிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் பாலக்கோட்டில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் பயங்கரவாதிகள் பலர் உயிரிழந்தனர்.

அந்த தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகளான லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது ஆகியவை தங்களது தளங்களை ஆப்கானிஸ்தானிலுள்ள கனார், நங்கர்ஹார், நூரிஸ்தான் மற்றும் காந்தகார் மாகாணங்களுக்கு மாற்றியிருப்பதாக இந்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து காபூல் மற்றும் கந்தகாரில் உள்ள இந்திய தூதரகங்கள் உச்சகட்ட பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments