காவிரி நீரை பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது - துரைக்கண்ணு

0 417

காவிரி நீரை பெறுவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.

கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் பல்வேறு மாவட்ட வழித்தடங்களுக்கு 6 புதிய பேருந்துகளை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரைக்கண்ணு, மத்திய அரசு விவசாயிகளின் நலன் கருதி நெல்லுக்கு 2 ஆயிரத்து 750 ரூபாயை ஆதார விலையாக நிர்ணயித்துள்ளதாக கூறினார்.

செய்தியாளர்கள் இடைமறித்து மத்திய அரசு நெல் குவிண்டால் ஒன்றுக்கு ஆயிரத்து 815 ரூபாய் அறிவித்துள்ளதை சுட்டிக் காட்டிய பிறகு, தான் சொன்ன விலை கரும்பிற்கானது என்றும், நெல்லுக்கான ஆதார விலை விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறி சமாளித்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments