நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்யக் கோரி துணை நடிகர்கள் மனு

0 651

நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

துணை நடிகர்கள் பெஞ்சமின், சிங்காரவேலன், சிம்மராசு ஆகிய மூன்று பேர் தாக்கல் செய்துள்ள மனுவில், நடிகர் சங்கத் தேர்தலில் தங்களை தபால் ஓட்டு போட அனுமதிக்கவில்லை என்றும், தபால் ஓட்டுக்களின் ரகசியத் தன்மை காப்பாற்றப்படவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.

தேர்தல் விதிகளை மீறியும் சங்கத்தின் சட்ட விதிகளை மீறியும் சங்கத் தேர்தல் நடந்திருப்பதாகவும், இந்த தேர்தலில் பல உறுப்பினர்கள் தபால் ஓட்டு போட முடியவில்லை என்றும் புகார் கூறப்பட்டு இருந்தது.

தேர்தல் நாளுக்கு முந்தைய நாள் வரை தபால் ஓட்டு வரவில்லை என்றும் நேரில் வந்த பலருக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

எனவே இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்த மனுவானது நீதிபதி ஆதிகேசவலு முன் வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments