ஒரு வாரத்தில் ரயிலில் சென்னைக்கு குடிநீர்..!

0 570

ஜோலார்பேட்டையில் இருந்து  தினமும் சென்னைக்கு நான்கு முறை என ரெயிலில் தலா 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொண்டு வருவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. 

பருவ மழை... அதற்கான அறிகுறி... என எதுவும் கண்ணுக்கு தென் படாத நிலையில், நீர் ஆதாரமாக இருந்த முக்கிய ஏரிகள், குழங்கள் வரண்டு நிலத்தடி நீர் இல்லாமல் பெருமளவில் சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை சமாளிக்க, தமிழக அரசு மாற்று ஏற்பாடு மூலம் ஜோலார்ப்பேட்டையில் இருந்து ரயில்கள் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வருவதற்காக, முழு முயற்சியுடன் களம் இறங்கியது. அதன் படி குடிநீர் மற்றும் வடிகால் அகற்று வாரிய அதிகாரிகள் தெற்கு ரயில்வே நிர்வாகத்துடன் பேசி, ரயில்கள் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடிவெடுக்கப்பட்டது.

ஜோலார் பேட்டையில் இருந்து, 50 டேங்கர் இணைக்கப்பட்ட ஒரு ரெயிலில் 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீதம், நாள் ஒன்றுக்கு 4 முறை என 10 MLD தண்ணீர் சென்னைக்கு கொண் வருவது என முடிவு செய்துள்ள அதிகாரிகள் அதற்காண பணிகளை வேகப்படுத்தி உள்ளனர்.டு

கடந்த 2001 ம் ஆண்டில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டபோது, ஐ சி எஃப் ரயில்வே பணிமனையில் பொருத்தப்பட்ட பழைய இரும்பு குழாய்களின் தற்போதைய தன்மையையும், அதனின் சுற்றளவு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து அவற்றை எடுத்துவிட்டனர்.

அதற்கு பதிலாக பெரிய அளவிலான புதிய குழாய்களை பதித்து வருகின்றனர். ரயில்களில் சென்னைக்கு கொண்டு வரப்படும் தண்ணீரை, புதிய குழாய்கள் மூலம் கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு சென்று மக்களுக்கு வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தவிர 1955 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் காலத்தில், ஐ சி எஃப் ரயில்வே பகுதி பழியாக, செங்குன்றத்தில் இருந்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு பூமிக்கடியில் உள்ள நீர் வழிப்பாதையின் மேல் பகுதியினை சீரமைத்து, அதனுடன் புதிதாக அமைக்கப்பட்டு குழாயினை இணைக்கும் பணிக்கான வேலையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இன்னும் மூன்று நாட்களில் இதற்கான பணிகள் முழுமை அடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், குடிநீர் வாரிய அதிகாரிகளின் இறுதிகட்ட ஆய்வு பணிக்கு பின், அடுத்த வாரத்தின் இறுதியில் நாள் ஒன்றுக்கு 200 டேங்கர்களில் ரெயில் மூலம் 10 MLD தண்ணீர் கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments