பால் விலை உயர்த்தப்படும் -முதலமைச்சர்

0 1433

பால் விலை உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூசகமாக தெரிவித்துள்ளார்.

 சட்டப்பேரவையில்,  பால்வளத்துறையின் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய திமுக உறுப்பினர் கே.பி.பி.சாமி, பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருவதாகவும், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தவிடு, புண்ணாக்கு, பருத்திக்கொட்டை பொருட்களின் விலை உயர்வை காரணம் காட்டி பால் கொள்முதல் விலையை உயர்த்த பரிசீலனை செய்து வருவதாக தெரிவித்தார்.

அதே நேரத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலையை உயர்த்தினால் பால் நுகர்வோருக்கான விலையும் உயரும் எனவும் அதற்கு திமுக சம்மதிக்குமா எனவும் முதலமைச்சர் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய திமுக உறுப்பினர் சக்கரபானி, பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிவிட்டு, பால் நுகர்வோருக்கான விலை உயர்வை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த முதலமைச்சர், ஏற்கனவே பல பால் கூட்டுறவு சங்கங்கள் நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும், விலை உயர்த்தினால் மேலும் நஷ்டம் ஏற்படும் என விளக்கினார்.

அதே நேரத்தில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலை மற்றும் பால் நுகர்வோருக்கான விலை இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவதற்கு முன்னதாகவே உயர்த்தப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments