7 காட்டு யானைகள் குட்டிகளுடன் முகாம்

0 338

நீலகிரி மாவட்டம் பர்லியார், மரப்பாலம் பகுதிகளில் பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளதால் இரண்டு குட்டிகளுடன் 7 காட்டு யானைகள் அங்கு முகாமிட்டுள்ளன.

பர்லியார், மரப்பாலம் குரும்பா வில்லேஜ் ஆகிய பகுதிகளில் தற்போது அதிகளவில் பலாப்பழம் காய்த்துள்ளது. இதனை சாப்பிட மேட்டுப்பாளையம், சிறுமுகை, கல்லார் போன்ற பகுதிகளில் இருந்து கடந்த ஒரு வார காலமாக 2 குட்டிகளுடன் 7 காட்டு யானைகள் அப்பகுதியில் முகாமிட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று இந்த 7 காட்டுயானைகளும் தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் முயற்சியில் ஈடுபட்டன. ஆனால் நெடுஞ்சாலையில் அதிகமாக வாகனங்கள் சென்று கொண்டே இருந்ததால் அவைகளால் சாலையை கடக்க முடிய வில்லை.

இதனை அறிந்த வனத்துறையினர் அப்பகுதிக்கு வந்து சாலையின் இரு புறமும் உள்ள வாகனங்களை மேற்கொண்டு செல்ல விடாமல் யானைக்கூட்டம் சாலையை கடந்து செல்லும் வரை தடுத்து நிறுத்தினர்.

 யானைகள் சாலையை கடந்ததும் பின்னர் மீண்டும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. மேலும் யானைக்கூட்டம் அங்கேயே முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டுனர்கள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என்றும் இரு சக்கர வாகனத்தில் செலபவர்கள் இரவில் பயணிப்பதை தவிர்க்கவேண்டும் என்றும் வனத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments