மலிவு விலை நாப்கின் இயந்திரத்தை தயாரித்த முருகானந்தத்தை சந்தித்த பிராவோ

0 4431

கோவை மாவட்டத்தில், மலிவு விலை நாப்கின் இயந்திரத்தை தயாரித்த முருகானந்தத்தை, மேற்கு இந்தியதீவு அணி முன்னாள் வீரர் பிராவோ, சந்தித்து பேசினார். கோவையை சேர்ந்த முருகானந்தம் என்பவர், கிராமப்புற ஏழை பெண்களுக்காக மலிவு விலை நாப்கின்களை தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கியுள்ளார்.

இந்த இயந்திரம் குறித்து அறிந்த பிராவோ, கோவை வந்து முருகானந்தத்தை சந்தித்தார். அவருடன் கலந்துரையாடிய பிராவோ, தனது சொந்த நாடான டிரினிடாட் டொபாகோவில், மாதவிடாய் பிரச்னையை எதிர்கொள்ள தெரியாமல் பள்ளி சிறுமிகள் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிடுவதாக கவலை தெரிவித்தார்.

மேலும் கிராம மக்களுக்கும் இதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால், அவர்களுக்கு நாப்கின் கிடைக்க, முருகானந்தன் தனது இயந்திரம் மூலம் உதவும்படி பிராவோ கேட்டுக்கொண்டார். இதனால் முருகானந்தம் தயாரித்த இயந்திரங்கள், விரைவில் டிரினிடாட் டொபாகோ செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments