இயக்குநர் சங்க தலைவர் பதவியை பாரதிராஜா மீண்டும் ஏற்க வலியுறுத்தல்

0 409

இயக்குநர் சங்க தலைவர் பதவியை பாரதிராஜா மீண்டும் ஏற்க வலியுறுத்தி அவரது அலுவலகத்தில் இணை இயக்குனர்கள் கடிதம் கொடுத்துள்ளனர்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கதின் 2019-2021க்கான தலைவராக கடந்த மாதம் 10 ஆம் தேதி இயக்குனர் பாரதிராஜா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்ற பதவிகளுக்கான தேர்தல் வேலைகள் நடைபெற்று கொண்டு இருந்த நிலையில் தலைவர் பதிவில் இருந்து தான் விலகிக்கொள்வதாக இயக்குனர் பாரதிராஜா அறிவித்தார். இதனால் வரும் 14ஆம் தேதி மற்ற பதிவிகளுக்காக நடக்கவிருந்த தேர்தல் தடைப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாரதிராஜா மீண்டும் தலைவர் பதவியை ஏற்க வேண்டும் என வலியுறுத்தி இணை இயக்குனர்கள் பாரதிராஜாவின் அலுவலகத்தில் கடிதம் கொடுத்துள்ளனர். பாரதிராஜா படப்பிடிப்புக்காக தேனியில் உள்ளதால் அவரிடம் தொலைபேசி மூலமும் அவர்கள் கோரிக்கையை வைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments