கழிவுநீர் வாய்க்காலுக்குள் தவறி விழுந்த குதிரை

0 481

தாய்லாந்து நாட்டில் கழிவுநீர் வாய்க்காலில் விழுந்து சிக்கிய குதிரை பல மணி நேரப் போராட்டத்திற்கு மீட்கப்பட்டது.

நந்தபூரி என்ற இடத்தைச் சேர்ந்த நித்திய லிமாலை என்பவருக்குச் சொந்தமான குதிரை ஒன்று சாலையோரத்தில் புல் மேய்ந்து கொண்டிருந்த போது அருகில் இருந்த கழிவுநீர் குழிக்குள் விழுந்து சிக்கிக் கொண்டது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் குதிரையை மீட்க முயன்றனர்.

இதற்காக கழிவுநீர் குழியை மூடியிருந்த சிமெண்ட் மூடியை இயந்திரங்களால் உடைத்தனர். இறுதியில் 3 மணி நேரப் போராட்டத்திற்கு பின் குதிரை மீட்கப்பட்டது. பின்னர் கிரேன் மூலம் மேலே தூக்கப்பட்ட குதிரை துள்ளிக்குதித்து ஓடியது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments