கல்வித்துறை, மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர்கள் திடீர் இடமாற்றம்

0 222

தமிழக பள்ளி கல்வித்துறை மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரக இயக்குநர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,பள்ளி கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநராக இருந்த கண்ணப்பன், பள்ளிக் கல்வித்துறை இயக்குநராக நியமனம் செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நிர்வாக நலன் கருதி இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments