ஒரே பிரசவத்தில் பிறந்த இரு பனி சிறுத்தை குட்டிகள்

0 641

இங்கிலாந்தில்,  ஒரே பிரசவத்தில் பிறந்த இரு பனி சிறுத்தை குட்டிகள், மக்களின் பார்வைக்கு விடப்பட்டுள்ளன. 

அந்நாட்டின் கென்ட் என்ற இடத்தில் உள்ள விலங்கியல் சரணாலயத்தில், லைலா என்ற பெண் பனி சிறுத்தை ஒரே பிரசவத்தில் இரு குட்டிகள் பிறந்தன.

9 வாரங்கள் பத்திரமாக தனி இடத்தில் வைத்து பாதுகாக்கப்பட்ட சிறுத்தை குட்டிகள் , இப்போது முதல் முறையாக பார்வையாளர்கள் காண அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆண் குட்டிகளில் மெலிந்துள்ள குட்டி சுறுசுறுப்பாக விளையாடும் நிலையில், குண்டான குட்டி, உண்டு உறங்குவதில் ஆர்வம் காட்டுவதாக பராமரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் குட்டிகள் இரண்டும் செய்யும் சுட்டித்தனங்கள் பார்வையாளர்களை கட்டிப்போட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments