அரசு மருத்துவமனை முன்பு மறியல் போராட்டம்

0 306

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உரிய சிகிச்சை அளிக்க காலதாமதமானதால் பெண் உயிரிழந்ததாகக் கூறி, ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் குட்டையூர் பகுதியை சேர்ந்த ராஜன் மற்றும் அவரது மனைவி ருக்மணி ஆகியோர் விபத்தில் காயமடைந்தனர். அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர்.

அதன்பின் அங்கு ருக்மணியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் 2 மணி நேரத்திற்குப் பின் அன்னூர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஸ்கேன் செய்வதற்காக அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இரவு நேரத்தில் பணியில் இருந்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ருக்மணியின் உறவினர்கள் உதகை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments