மாணவர்களின் வருகையை தெரிவிக்க பெற்றோருக்கு குறுஞ்செய்தி

0 358

நீட் தேர்வை தொடர்ந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவர்கள் சிஏ படிக்க வழிகாட்டு பயிற்சிகள் அளிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பின்பு புதிய அறிவிப்புகளை பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். அதில், மாணவர்கள் பாதுகாப்பாக பள்ளிக்கு வருகை புரியும் தகவலை பெற்றோருக்கு தெரிவிக்கும் விதமாக குறுஞ்செய்தி அனுப்பும் முறையை பள்ளி கல்வி துறை அறிமுகப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் ரத்து செய்யப்பட உள்ளதாக அவர் கூறினார். ஏற்கனவே 32 மாவட்டங்களில் மாதிரி பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 88 கல்வி மாவட்டங்களிலும் தலா ஒரு மாதிரிப் பள்ளிகள் உருவாக்கப்பட உள்ளதாகவும், இதற்காக ஒரு பள்ளிக்கு 20 லட்சம் வீதம் 17 கோடியே 60 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT