இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தில் சில மாற்றங்களை கொண்டுவர முடிவு

0 700

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தில் சில மாற்றங்களை கொண்டுவர ஆலோசனை நடந்து வருவதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய திமுக உறுப்பினர் எழிலரசன், ‛‛ 1 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் அரசு பள்ளிகள் இருந்தால், இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் சேர்க்கை கூடாது என சட்டத்தில் விதி இருப்பதாகக் கூறினார். ஆனால் இந்த விதியை மீறி  அரசு பள்ளிகள் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள தனியார் பள்ளிகளில், கட்டாயக்கல்வி சட்டத்தின் கீழ் மாணவர்கள் சேர்க்கப்படுவதாகக் கூறினார்.

இதனால் அரசு பள்ளிகளை மூடும் நிலை ஏற்படும் என்றும், எனவே இந்த சட்டத்தில் மாற்றம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், ‛‛உறுப்பினர் நல்ல ஆலோசனை வழங்கியிருக்கிறார் எனவும், கர்நாடகாவில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளனர் எனவும் கூறினார்.

அதன்படி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் அரசு பள்ளிகள் இருக்கும்பட்சத்தில், அருகில் உள்ள தனியார் பள்ளிகளில் ஆர்.டி.இ., சட்டத்தின் கீழ் மாணவர்  சேர்க்கையை அனுமதிப்பதில்லை என, அங்கே மாற்றம் கொண்டு வந்துள்ளனர் என்றும், தமிழகத்திலும் இந்த மாற்றத்தை கொண்டு வர ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து விரைவில் அமைச்சரவையில் முடிவு எடுத்து, அவையில் அறிவிப்பு வெளியிடப்படும்’’ எனவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments