நடிகர் விஷால் ரூ.1 கோடி சேவை வரி ஏய்ப்பு செய்ததாக புகார்

0 1004

நடிகர் விஷால்,1 கோடி ரூபாய் சேவை வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்படும் வழக்கு தொடர்பான விசாரணையை, வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு, நடிகர் விஷாலின் அலுவலகத்தில் சேவை வரித்துறையினர் நடத்திய சோதனையில், அவர் ஒரு கோடி ரூபாய் சேவை வரி ஏய்ப்பு செய்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இதையடுத்து விஷாலுக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் அவரது தரப்பில் பதிலளிக்கப்படாததால் அவர் மீது எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் எழும்பூர் பொருளாதார குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஹெர்மிஸ் முன்பு விஷால் இன்று ஆஜரானார். குறுக்கு விசாரணை நடத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இவ்விசாரணையின்போது விவாதிக்கப்பட்டது. பின்னர், இவ்வழக்கு விசாரணையை வருகிற ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு மாஜிஸ்திரேட் ஒத்திவைத்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments