பணியின் போது மின்சாரம் தாக்கி உடல் கருகி உயிரிழந்த பெயிண்டர்

0 194

சென்னை, சோழிங்கநல்லூர் அருகே கட்டிடத்தின் 2ஆவது மாடியில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்த இளைஞர் கால் இடறி மின் கம்பத்தில் விழுந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

சித்தாலப்பாக்கம் வள்ளுவர் நகரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வருகிறார். வழக்கம் போல் இன்று சித்தாலப்பாக்கம் கண்ணியம்மன் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது கால் இடறி தவறி விழுந்த அவர், மின் கம்ப வயர் மீது விழுந்தார். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட ரமேஷ், அருகில் இருந்த மற்றொரு குடியிருப்பின் மாடியில் விழுந்தார்.

இதைக் கண்ட சக ஊழியர்கள் அவசர ஊர்திக்கு தகவல் கூறினர். அவர்கள் வந்து பரிசோதித்து பார்த்த போது, ரமேஷ் உடல் கருகி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு சென்ற பள்ளிக்கரணை போலீசார், ரமேஷின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments