ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்தது உச்சநீதிமன்றம்

0 412

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை மேலும் 4 வாரங்களுக்கு உச்சநீதிமன்றம் நீட்டித்துள்ளது.

ஆறுமுகசாமி ஆணையத்தில் சாட்சி அளிக்கும் போது தாங்கள் கூறும் தரவுகள் தவறாக புரிந்துகொள்ளப்படுவதாகவும், எனவே மருத்துவக் குழு அமைக்கப்பட்டு அதன் முன்னிலையில் தங்களிடம் ஆணையம் விசாரணை நடத்த உத்தரவிடுமாறும் கோரி அப்போலோ மருத்துவமனை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அப்போலோ மருத்துவமனை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த   தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வு, விசாரணைக்கு அளவுக்கு அதிகமான காலத்தை ஆறுமுகசாமி ஆணையம் எடுத்துக் கொண்டுள்ளது என்ற அப்போலோ தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்டது.

ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்காலத் தடையும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பதிலளிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments