மத நம்பிக்கை காரணமாக நடிப்பை துறந்த பாலிவுட் நடிகை

0 1689

மத நம்பிக்கை காரணமாக பாலிவுட் திரையுலகை விட்டு விலகுவதாக நடிகை ஜாயிரா வாசிம் தெரிவித்துள்ளார்.

டங்கல் படத்தில் அமீர்கானின் மகளாக நடித்த ஜாயிரா வாசிம் திரையுலகில் நடித்ததனால் தமக்கும் அல்லாவுக்குமான இடைவெளி அதிகரித்ததாகவும் தாம் அறியாமையின் பாதையில் சென்று விட்டதாகவும் கூறியுள்ளார்.

பாலிவுட்டில் எல்லோரும் தம்மீது அன்பையே பொழிந்த போதும் தாம் தமது திரைப்பட வாய்ப்புகள் குறித்து மகிழ்ச்சியடையவில்லை என்றும் தமக்கு கிடைத்த அடையாளம் மகிழ்ச்சியளிப்பதாக இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மதரீதியாக அல்லாவுக்கு உண்மையாக இருப்பதற்காக திரைப்படத்துறையை விட்டு விலகுவதாக ஜாயிரா வாசிம் அறிவித்துள்ளார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments