ரஷ்யாவிடமிருந்து ஸ்ட்ரமத்கா எனும் ஏவுகணையை வாங்குகிறது இந்தியா

0 1230

 எதிரி டாங்குகளை தாக்கி அளிக்கக்கூடிய ஸ்ட்ரமத்கா எனும் ஏவுகணையை ரஷ்யாவிடமிருந்து வாங்குவதற்கு இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்திய ராணுவத்தை பலப்படுத்தும் வண்ணம் ரஷ்யாவிடமிருந்து நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளிட்டவற்றை வாங்க இந்தியா ஏற்கெனவே ஒப்பந்தம் செய்து அதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஸ்பைஸ் 2000 ரக வெடிகுண்டுகள் உள்ளிட்டவற்றையும் அந்நாட்டிடமிருந்து இந்திய விமானப்படை முன்னதாக பெற்றிருந்தது.

இந்த நிலையில், அவசர காலங்களில் மத்திய விமானப் படைக்கு உதவக்கூடிய வகையில், எதிரி டாங்குகளை தாக்கி அளிக்கக்கூடிய ஏவுகணையை ரஷ்யாவிடமிருந்து வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, அதிநவீன தொழில்நுட்பத்தில் இயங்கும் வண்ணம் உருவாக்கப்படவுள்ள ஸ்ட்ரமத்கா எனும் இந்த ஏவுகணையை, சுமார் 200 கோடி ரூபாய்க்கு இந்தியா வாங்குகிறது. இருநாடுகளிடையே இதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னும் 3 மாத காலத்திற்குள் இந்த புதிய ஏவுகணையை இந்தியா பெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments