ஐ.ஜே.எஸ். என்ற தேர்வு முறையைக் கொண்டு வர பாஜக அரசு திட்டம்

0 1363

கீழமை நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை நியமிப்பதற்கு அகில இந்திய நீதித்துறை தேர்வாணையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களுக்கான நீதிபதிகள் கொலிஜியம் மூலம் பரிந்துரை செய்யப்பட்டு நியமிக்கப்படுகின்றனர். மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மாஜிஸ்திரேட்டுகள் அந்தந்த மாநில ஆளுநர்களால் நியமிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மாஜிஸ்திரேட்டுகளை தேர்வு செய்ய, ஐ.ஜே.எஸ் எனப்படும் இந்தியன் ஜுடீசியல் சர்வீசஸ் என்ற தேர்வு முறையைக் கொண்டு வர முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் திட்டமிடப்பட்டது.

இதற்காக தேசிய நீதித்துறை நியமன ஆணைய மசோதா கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த மசோதா, அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதே திட்டத்தை தற்போது கையில் எடுத்துள்ள பாஜகவானது, அகில இந்திய நீதித்துறை தேர்வாணையம் என்ற அமைப்பு ஏற்படுத்தி அதன் மூலம், போட்டித் தேர்வு நடத்தி நீதிபதிகளை நியமிக்க திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக கருத்துகளை தெரிவிக்குமாறு அனைத்து மாநில அரசுகள் மற்றும் உயர்நீதிமன்றங்களுக்கு மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடிதம் எழுதி உள்ளார். ஆனால் இந்த நடைமுறையால் மாநில அரசுகளின் உரிமைகள் பறிபோகும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments