பூரண உடல் நலத்துடன் இருப்பதாக ஜெர்மன் பிரதமர் தகவல்

0 365

பொது இடங்களில் இரு முறை உடல் நடுக்கம் ஏற்பட்ட நிலையில்  நலமுடன் இருப்பதாக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனிக்கு வந்த  உக்ரைன் அதிபருக்கு வரவேற்பு அளித்த போதும், மற்றொரு பொது நிகழ்ச்சியின் போதும், மெர்கலுக்கு உடல் நடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் ஜெர்மனியில் இருந்து நீண்ட தூரம் பயணம் செய்து ஜி20 மாநாடு நடைபெற்ற ஜப்பானின் ஒசாகாவுக்கு மெர்கல் வந்தடைந்தார்.

பல்வேறு நாட்டுத் தலைவர்களுடனும் அரசு ரீதியான பேச்சுவார்த்தைகளையும் நடத்தினார். மாநாடு நிறைவுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த போது,  ஏஞ்சலா மெர்க்கலில் உடல் நிலை குறித்து கேள்வி எழுப்பப் பட்டது. அப்போது தாம் நலமுடன் இருப்பதாகவும்,  உடல் நடுக்கம் வந்தால் அதுவே நின்றுவிடும் என்றும் மெர்க்கல் குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments