குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட தலைமைக் காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்..!

0 471

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட தலைமைக் காவலர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மணல்மேடு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகம் இருந்த செந்தில்குமார் மருத்துவமனையில் இரவுப் பாதுகாப்புப் பணியில் இருந்த போது நோயாளிகளிடம் தகராறில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

செந்தில்குமாரை நாகை ஆயுதப் படைக்கு மாற்றி நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே குடிபோதையில் தகராறு செய்ததால் தஞ்சையில் இருந்து மணல் மேடு காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட செந்தில்குமார் தற்போது மீண்டும் பிரச்னையில் சிக்கியுள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments