பிரதமர் மோடியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட ஆஸ்திரேலிய பிரதமர்

0 807

ஜப்பானின் ஒசாகா மாநாட்டில் பிரதமர் மோடியுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபியை ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஜி20 மாநாட்டில் பங்கேற்றுள்ள இரு தலைவர்களும் இன்று காலை சந்தித்து பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர்.

அப்போது மோடியுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபியை ஸ்காட் மோரிசன் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எவ்வளவு மென்மையானவர் மோடி எனப் பொருள்படும் இந்தி வாசகங்களுடன் அந்த படத்தை ஸ்காட் மோரிசன் பதிவிட்டுள்ளார்.

இதை தமது ட்விட்டர் பக்கத்தில் இணைத்து பிரதமர் மோடியும் பதிலுக்கு ட்வீட் செய்துள்ளார். அதில், நண்பரே, இந்திய-ஆஸ்திரேலிய உறவுகள் தரும் உத்வேகத்தால் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் என மோடி குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியர்கள் வழக்கத்தில் புழங்கும் சொற்களை பயன்படுத்தி, Mate, I’m stoked about the energy of our bilateral relationship! என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவிலும் இந்தியாவிலும் அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றிபெற்ற இரு தலைவர்களும் அப்போது வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments