அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஒரு புதிய உத்தரவு..!

0 1460

அரசு உதவி பெறும் தங்கள் பள்ளிகள் பெயர்ப் பலகையில் அதனைக் குறிப்பிட பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பெயர்ப் பலகையில் பள்ளியின் பெயரை மட்டும் குறிப்பிடுவதால் தனியார் பள்ளிகள் என மக்கள் நினைக்க வாய்ப்புள்ளதாக சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனவே பள்ளியின் பெயருடன் அரசு உதவி பெறும் பள்ளி என தமிழிலிலும் ஆங்கிலத்திலும் குறிப்பிட சுற்றறிக்கை அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments