ஓடும் ரயில் முன்பு செல்ஃபி எடுத்த கல்லூரி மாணவர் பலி

0 355

புதுக்கோட்டை அருகே ஓடும் ரயில் முன்பு செல்பி எடுத்த கல்லூரி மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

மச்சுவாடியை சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் என்பவர்  தனது நண்பர்களுடன் பூசதுறை அருகே உள்ள ரயில்வே பாலத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த மானாமதுரை- மன்னார்குடி பயணிகள் ரயில் முன்பு மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் செல்பி எடுத்ததாக கூறப்படுகிறது.

இதில் எதிர்பாராத விதமாக ரயில் மோதி மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பர் மகேந்திரன் என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த தகவலின் பேரில்  நமணசமுத்திரம் போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments