வெள்ளை பொடி கலந்த, காற்றை சுவாசிப்பதால் நோய்

0 862

கரூர் அருகே செயல்படும் கல்பொடி தொழிற்சாலைகளால், கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. தொழிற்சாலை கழிவுகளால் சுற்றுச்சூழல் கெட்டு, மக்களின் உடல் நலமும் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து விளக்குகிறது இந்த செய்தி...

கரூர் மாவட்டம் தேவர்மலையை அடுத்துள்ள ஆதனூர் ஊராட்சியில் பத்தாண்டுகளுக்கு முன்னர் சக்தி ஆலை என்ற தனியார் ஆலை ஒன்று தொடங்கப்பட்டது.

கற்களை வெட்டி எடுத்து, அவற்றை பொடியாக்கும் இந்த ஆலை, அடுத்தடுத்து மேலும் மூன்று ஆலைகளை சுற்றுவட்டார கிராமங்களில் தொடங்கியது.

ஆலைகள் முழு வீச்சில் இயங்கும் நிலையில், அதிலிருந்து வெளியேறும் வெள்ளை நிற கல்பொடியால் பால்மடைப்பட்டி, குருணிகுளத்துப்பட்டி, ஆதனூர், உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் கூறியுள்ளனர்.

வெள்ளை பொடி கலந்த காற்றை சுவாசிப்பதால் பலருக்கும் புற்றுநோய், சுவாச கோளாறு ஏற்படுவதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கல்பொடிகள் அதிக அளவில் பறப்பதால் இருசக்கர வாகனம் ஓட்டுவோருக்கு எதிரே வரும் வாகனம் தெரியாத நிலை ஏற்படுவதாகவும், இதனால் விபத்து நேரிடுவதாகவும் கிராம மக்கள் கூறியுள்ளனர். மேலும் செடி,கொடிகளிலும், புற்களிலும் படிந்து கிடக்கும் கல்பொடியால், கால்நடைகளும் பாதிக்கப்பட்டு, உயிரிழப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

கல்பொடி ஆலைகளுக்கு வந்து செல்லும் கனரக வாகனங்களால் விபத்து ஏற்படுவதாகும் புகார் கூறப்பட்டுள்ளது. விவசாயத்தை பாதித்து, மக்களுக்கும், கால்நடைகளுக்கும், உயிர் ஆபத்தை உண்டாக்கும் கல் பொடி ஆலைகளை மூட வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT