சார்லீஸ் ஏஞ்சல்ஸ் படத்தின் புதிய பதிப்பு -டிரைலர் வெளியீடு

0 428

பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான "Charlie's Angels படத்தின் புதிய பதிப்பு தயாரிப்பில் உள்ள நிலையில் அதன் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

கிறிஸ்டின் ஸ்டீவர்ட் தலைமையில் நவோமி ஸ்காட், எல்லா பாலின்ஸ்கா ஆகிய கதாநாயகிகளின் பரபரப்பான சண்டைக்காட்சிகள் இந்த டிரைலரில் இடம்பெற்றுள்ளன.

இப்படத்தை எலிசபெத் பேங்க்ஸ் இயக்கியுள்ளார். பெண்களே முக்கியப் பாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரான இப்படத்தை ஒரு பெண் இயக்குனரே இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சார்லீஸ் ஏஞ்சல்ஸ் பட வரிசையில் உருவான இப்புதிய திரைப்படம் நவம்பரில் வெளியாகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments