திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

0 464

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் தென்காசியைச் சேர்ந்த ஒருவரை, என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர், கடந்த பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். மதமாற்றத்தை தட்டிக்கேட்டதால் அவர் கொலை செய்யப்பட்டதாக அப்போது கூறப்பட்டது.

இந்த வழக்கில் 11 பேரை போலீசார் கைது செய்தனர். ஆனால் போராட்டங்கள் வலுத்ததை அடுத்து இந்த வழக்கானது போலீசிடம் இருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. திருபுவனம் வந்து விசாரணை மேற்கொண்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்,
கைது செய்யப்பட்டுள்ள 11 பேரைக் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

அதன் அடிப்படையில் நெல்லை மாவட்டம் தென்காசியைச் சேர்ந்த மைதீன் அகமது ஷாலி என்பவரை விசாரணைக்காக கடந்த 25ஆம் தேதி கொச்சி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். விசாரணைக்குப் பின்னர் அவரைக் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments