விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு

0 328

விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

சென்னை தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில்சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு செவ்வாய்கிழமை தொடங்கியது. முதல் நாளில் மாற்றுத் திறனாளிகள் பிரிவு கலந்தாய்வும், நேற்று முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கான கலந்தாய்வும் நடைபெற்றன.

இந்நிலையில் இன்று விளையாட்டுப் பிரிவில் மொத்தமுள்ள 500 இடங்களுக்கு விண்ணப்பித்துள்ள 1,658 பேரிடம் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதனிடையே நேற்று தொடங்கிய தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நாளை வரை நடைபெறுகிறது.

மொத்தம் 5 ஆயிரத்து 288 இடங்களுக்கு 1,458 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ள நிலையில் நாள் ஒன்றுக்கு 500 பேர் அழைக்கப்பட்டு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. நாளையுடன் சிறப்பு பிரிவு கலந்தாய்வு நிறைவடையும் நிலையில் ஜுலை 8 முதல் 28-ஆம் தேதி வரை பொதுப் பிரிவு கலந்தாய்வு நடைபெறுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments