அரசு மருத்துவமனையில் 3 வயது பெண் குழந்தைக்கு நாய்க்கடி

0 554

நாமக்கலில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 வயது பெண் குழந்தையை நாய் கடித்த நிலையில், அக்குழந்தைக்கு தாமதமாக சிகிச்சை அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம்,பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில், அந்த பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த கட்டிட கூலி தொழிலாளி ஹரிஹரனின் 3 வயது மகள், காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை அக்குழந்தை, மருத்துவமனை வார்டு முன்பு வந்துள்ளது, அப்போது அங்கிருந்த நாய் ஒன்று குழந்தையை கடித்துள்ளது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த ஹரிஹரன், குழந்தையை செவிலியரிடம் தூக்கி சென்றுள்ளார்.

அப்போது அந்த செவிலியர் அவர்களை வார்டுக்கு செல்லும் படியும், தாங்கள் வந்து சிகிச்சை அளிப்போம் என்று கூறியதாகவும், இதனையடுத்து இரண்டு மணி நேரத்திற்கு பிறகே குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது எனவும் ஹரிஹரன் குற்றம்சாட்டி உள்ளார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments