இடது கையில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு வலது கையில் கட்டு

0 2212

பீகாரில் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட சிறுவனுக்கு, அரசு மருத்துவமனையில் வலது கையில் கட்டுப்போடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலத்தின் தர்பங்கா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு, இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட 7 வயது சிறுவனை அவனது தாய் சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளார்.

அங்கு அச்சிறுவனுக்கு மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர்கள் கட்டுப்போடும் பிரிவுக்கு அவனை அழைத்து சென்றுள்ளனர். அங்கு அச்சிறுவனுக்கு, இடது கைக்கு பதிலாக வலது கையில் கட்டுப்போடப்பட்டுள்ளது.

அப்போது மருத்துவர்களிடம் அச்சிறுவன் தனது இடது கையில் தான் முறிவு ஏற்பட்டுள்ளது என்பதை கூறியும், அதனை மருத்துவர்கள் அலட்சிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அச்சிறுவனின் தாய் புகார் அளித்துள்ள நிலையில் அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments