புதினுடன் என்ன பேசினால் உங்களுக்கு என்ன? - செய்தியாளர்களிடம் டிரம்ப் கேள்வி

0 614

ஜப்பானில் ரஷ்ய அதிபர் புதினுடன் தான் என்ன பேசப்போகிறேன் என்பது ஊடகங்களுக்கு  தேவையில்லாத விஷயம் என்று செய்தியாளர்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிலளித்துள்ளார்.

ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்கு ஜப்பான் புறப்படுவதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் ஜப்பானில் பேச்சு நடத்த இருப்பதாகக் கூறினார். அதில் பல நாடுகள் அமெரிக்காவை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதாகவும், விரைவில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் கூறினார்.

நீண்ட காலமாக அனைத்து நாடுகளும் அமெரிக்காவை பொருளாதார ரீதியாக சுரண்டி வருவதாகவும், ஆனால் இனி அது நடக்காது என்பதுதான் தற்போதுள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்றும் அவர் தெரிவித்தார். தான் அதிபராவதற்கு முன்னர் ஒரு சென்ட் தொகை கூட அமெரிக்காவுக்கு கட்டாத சீனா, தற்போது பில்லியன் கணக்கான டாலர்கள் செலுத்துவதாகவும் டிரம்ப் சுட்டிக்காட்டினார். 

ரஷ்ய அதிபரை புதினை பொறுத்தவரை அவருடன் சிறப்பான உரையாடல் அமையும் எனக் கூறிய டிரம்ப், ஆனால் அவருடன் தான் என்ன பேசப்போகிறேன் என்பது ஊடகங்களுக்கு தேவையில்லாத விஷயம் என பதிலளித்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யத் தலையீடு பற்றி விசாரணை நடத்திய ராபர்ட் முல்லர் அறிக்கை வெளியான பிறகு, முதல் முறையாக புதினை டிரம்ப் சந்திக்க உள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments