தந்தத்திற்காக கொல்லப்பட்ட யானைக்கு இறுதி அஞ்சலி செலுத்திய யானைகள்

0 689

யானைகள் கூட்டம் ஒன்று இறந்த யானையைக் கண்டு ஆற்றாமை கொண்ட நிகழ்ச்சி மீண்டும் அரங்கேறி உள்ளது.

ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் உள்ள சரங்கட்டி தேசியப் பூங்காவில் ஏராளமான யானைகள் உள்ளன. இங்கு கடந்த சில தினங்களுக்கு முன் ஆண் யானை ஒன்று கொல்லப்பட்டு அதன் தந்தங்கள் அறுத்தெடுக்கப்பட்டன.

மறுநாள் அதே வழியாக வந்த யானைக் கூட்டம் இறந்த யானைக்கு அருகே சென்று துதிக்கையை உயர்த்தியும், இறந்த யானையை ஆரத்தழுவியும், துதிக்கையால் தடவிக் கொடுத்தும் பாசத்தை வெளிப்படுத்தின.

அப்போது ஒரு யானை மட்டும் வெகுநேரம் அங்கேயே அமைதியாக நின்றபடி இருந்த காட்சி அங்கிருந்த சுற்றுலா பயணிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments