தாய்லாந்து குகையில் சிறுவர்கள் சிக்கிய ஓராண்டு தின அனுசரிப்பு

0 569

தாய்லாந்து நாட்டில்,12 சிறுவர்கள் குகைக்குள் சிக்கிய நிகழ்வு நடந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், மீட்புப் பணியின்போது உயிரிழந்த வீரருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தாய்லாந்தில் உள்ள தாம் லுவாங் எனும் குகைப் பகுதிக்கு கடந்த ஆண்டு ஜூன் 23ஆம் தேதி சாகசப் பயணம் மேற்கொள்ளச் சென்ற சிறுவர் கால்பந்து அணி வீரர்கள் 12 பேர் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர் திடீர்  வெள்ளப்பெருக்கு காரணமாக குகைக்குள் சிக்கிக்கொண்டனர்.

ஆழமான அந்த குகையிலிருந்து வெளியேற முடியாமல் அவர்கள் சிக்கித் தவித்த நிலையில், ஏராளமான மீட்புப் படையினர் தொடர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சுமார் 17 நாட்களாக தொடர்ந்த பணிகளின் முடிவில், குகைக்குள் சிக்கியவர்கள் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால், மீட்புப் பணியில் ஈடுபட்ட சமான் குனன் என்பவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில், இவ்விபத்தின் ஓராண்டு அனுசரிப்பு நிகழ்வு தாய்லாந்தில் நடைபெற்றது. குகையிலிருந்து மீட்கப்பட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்ட நிலையில், மீட்புப்பணியில் உயிரிழந்தவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments