ஆம்புலன்ஸ் இல்லாததால் இறந்த குழந்தையின் உடலை தோளில் சுமந்து சென்ற தந்தை

0 353

பீகாரில் இறந்த குழந்தையின் உடலை தந்தை தோளில் சுமந்து சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

பீகாரின் நாலந்தா மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையில், ஆம்புலன்ஸ் இல்லை எனக் கூறப்பட்டதால், உயிரிழந்த குழந்தையின் உடலை தந்தை சுமந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம், கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்படும் என நாலந்தா மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

மேலும் இந்த சம்பவத்திற்கு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியப் போக்குதான் காரணம் என கண்டுபிடிக்கப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது-

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments