பள்ளி மாணவிகளை ஆபாசமாகப் புகைப்படம் எடுத்து மிரட்டியதாக ஐவர் கைது

0 13771

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பள்ளி மாணவிகளை காதலிக்கக் கூறி மிரட்டி ஆபாசமாகப் படமெடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆனைமலை பகுதியைச் சேர்ந்த முகமது சபீர் மற்றும் அவனது நண்பர்கள் வசந்தகுமார், முகமது அர்ஷத், கமர்தீன், முகமது ரியாஸ் ஆகிய 5 பேரும் அப்பகுதியிலுள்ள அரசுப் பள்ளி மாணவிகளை காதலிக்கக் கூறி தொல்லை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

அதற்கு மாணவிகள் சம்மதிக்காததால், பள்ளிக்குச் செல்லும்போது அவர்களை வலுக்கட்டாயமாக கையைப் பிடித்து இழுத்து கட்டியணைத்தவாறும் முத்தம் கொடுப்பது போன்றும் ஆபாசமாகப் புகைப்படம் எடுத்துள்ளனர்.

அத்துடன் நில்லாமல் அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களிலும் பதிவேற்றியதாகக் கூறப்படுகிறது. இளைஞர்களின் இந்த செயலை தட்டிக்கேட்ட மாணவிகளின் பெற்றோரையும் அவர்கள் மிரட்டியுள்ளனர்.

இதனையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆனைமலை போலீசார் ஐவரையும் கைது செய்து 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் முகம்மது சபீர் மீது மட்டும் கூடுதலாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments