இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு இன்று 92வது பிறந்தநாள்

0 897

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு இன்று 92வது பிறந்தநாள். மறைந்தும் மறையாத மெல்லிசை மன்னரின் மகத்தான சாதனைகளை நினைவுகூர்கிறது இந்த செய்தித் தொகுப்பு


700க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்து இசை மேதையாகத் திகழ்ந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இணைந்து பணியாற்றிய விசுவநாதன்-ராமமூர்த்தி மெல்லிசை மன்னர்களாக வலம்வந்தனர்.

எம்ஜிஆரின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து எண்ணற்ற பாடல்களைத் தந்த எம்.எஸ்.வி. மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை ஆஸ்தான இசையமைப்பாளராக விளங்கினார். 

சிவாஜி கணேசன் நடித்த பாபு, ஞான ஒளி, சிவந்தமண், சுமதி என் சுந்தரி, ராஜா போன்ற பல படங்களுக்கு இசையமைத்தவர் எம்.எஸ்.வி.

டி.எம்.எஸ்., சீர்காழி கோவிந்தராஜன், பி.பி.ஸ்ரீநிவாஸ், ஜேசுதாஸ், எஸ்.பி.பி, மலேசியா வாசுதேவன், ஜெயச்சந்திரன், சந்திரபாபு, ஜெயலலிதா, பி.சுசிலா, வாணி ஜெயராம், எல்,ஆர்.ஈஸ்வரி, எஸ்.ஜானகி ஆகியோர் பாடிய ஆயிரமாயிரம் பாடல்கள் எம்.எஸ்.வி.யின் இசையமைப்பில் வெளிவந்தன.

இசையமைப்பாளராக மட்டுமின்றி நல்ல பாடகராகவும் திகழ்ந்த எம்.எஸ்.வி. ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார்.

கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், வைரமுத்து போன்ற பாடலாசிரியர்களின் வரிகளுக்கு உயிர்கொடுத்து, இயக்குனரின் விருப்பத்திற்கு ஏற்ப எம்.எஸ்.வி. படைத்தளித்த கணக்கிலடங்கா பாடல்கள் அன்றும், இன்றும், என்றும் ரசிகர்களின் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments